இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

மிலங்கா விலைச்சுட்டியில் பட்டியலிடப்படவுள்ள 25 கம்பனிகள்

28 ஜூன், 2010

வங்கி, நிதி மற்றும் காப்புறுதி:
கொமர்­ல் வங்கி,டி.எப்.சி.சி வங்கி,ஹற்றன் ந­னல் வங்கி, ஜன சக்தி இன்சுரன்ஸ்,மேர்­ன்ட் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி (என்.டி.பி), நே­ன்ஸ் ரஸ்ட் வங்கி, பான் ஏசியா வங்கி,சம்பத் வங்கி, செலான் வங்கி.
உணவு மற்றும்  குடிவகை:
டிஸ்ரிலறிஸ் கம்பனி,பல்பொருள் வர்த்தகம்:ஜோன் கீல்ஸ் ஹோல் டிங், றிச்சட் பீரிஸ்,உற்பத்தித்துறை: ஏ.சி.எல்.கேபிள்ஸ்,செவரன் லுப்ரிக் கன்ஸ் லங்கா,தொலைத் தொடர்புத் துறை:டயலொக் ரெலிகொம்,ஹோட் டல் மற்றும் பிரயாணம்:ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புறப்பட்டிஸ், ஜோன் கீல்ஸ் ஹோட்டல்ஸ்.
சுகாதாரம்:நவலோகா ஹோஸ் பிட்டல், முதலீடு: என்வெயர்மென்டல் றிசோசஸ் இன்வெஸ்மென்ட், லான்ட் அன்ட் புறப்பட்டிஸ்: ஓவசீஸ் றியா லிட்டி (சிலோன்), வலு மற்றும் சக்தி:லங்கா ஐ.ஓ.சி.,இரசாயனம் மற்றும் மருந்துஉற்பத்தி:கெமிக்கல் இன்டஷ்ரிஸ்,கட்டுமானம் மற்றும்  பொறியியல்:கொழும்பு டெக்யாட், வர்த்தகம்:பிறவுண் அன்ட் கம்பனி.

இலங்கையில் மிகமுன்னேற்றகரமான நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படும்-சம்பிக்க ரணவக்க

இலங்கையில் மிகவும் முன்னேற்றகரமான நகராக யாழ். நகரை மாற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மின்சக்தி எரி சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட அவர் , யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
சிறந்த சமூகமொன்றை கட்டியயழுப்புவதற்கு சமூகத்தின் மனித வளங்களை மட்டுமன்றி பெளதிக வளங்களையும் மேம்படுத்த வேண் டும். அபிவிருத்தியை மேலும் வேகப் படுத்துவற்கு மனிதவள முகாமைத் துவம் மிகவும் முக்கியமாகும்.
எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணம் நாட்டில் முன்னேறிய நகரமாக மாற்றப்படும்.தமிழ் மற்றும் சிங்கள கலாசார பெறுமானங்களை மதித்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னேற்ற சகலரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் 10 ஆயிரம் செல்போன் டவர்: பார்தி ஏர்டெல்

17 மார்ச், 2010

சென்னை : தமிழகத்தில் மொத்தம் 10 ஆயிரம் செல்போன் டவர்கள் இருப்பதாக பார்தி ஏர்டெல் நிறுவனம தெரிவித்துள்ளது. தமிழகத்திலேயே மிக அதிக டவர்கள் கொண்ட நிறுவனமாக பார்தி ஏர்டெல் திகழ்கிறது. இதுகுறித்து அந்நிறுவன தமிழக, கேரள தலைமை செயல் அதிகாரி ராஜிவ் கோபால் கூறும்போது, ஏர்டெல் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற, ஒன் ஸ்டாப் ஷாப்புகள் அமைக்கப் படும் என கூறினார்.
இந்நிறுவனம் 1.1 கோடி வாடிக்கையாளர்களுடன் தனது சேவையை மேலும் அதிகப் படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது. தமிழகத்தின் 95 சதவீத பகுதிகளில் சேவை அளிக்கும் இந்நிறுவனம், 1.25 லட்சம் விற்பனை மையங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது



தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள விறுவிறுப்பால் விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில் இதில் 16 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நடப்பு 2010-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் விமான பயணிகள் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்து 67.61 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற 2008-ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட உருக்குலைவால், இழப்பினைச் சந்தித்து வந்த இந்திய விமான போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்தியாவில் விமானங்களில் பயணித்தவர்கள் எண்ணிக்கை சென்ற பிப்ரவரி மாதத்தில், 38.60 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 33.36 லட்சமாக இருந்தது.

ஜெட் ஏர்வேஸ்

நரேஸ் கோயெல் தலைமையின் கீழ் செயல்படும் ஜெட் ஏர்வேஸ் (ஜெட் லைட் உள்பட) நிறுவனம் சென்ற பிப்ரவரி மாதத்தில் 10.08 லட்சம் பயணிகளை சுமந்து சென்றுள்ளது. மொத்த விமான பயணிகளின் எண்ணிக்கையில் 26.1 சதவீத பங்களிப்பை பெற்று இந்நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

இந்நிறுவனத்திற்கு அடுத்தபடியாக விஜய் மல்லையா தலைமையின் கீழ் செயல்படும் கிங் ஃபிஷர் நிறுவனம் 22.7 சதவீத பங்களிப்பைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் விமானங்களில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 8.77 லட்சமாகும்.

ஏர் இந்தியா

சென்ற பிப்ரவரி மாதத்தில் பொதுத்துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 15.5 சதவீதம் அதிகரித்து 6.63 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அம்மாதத்தில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதில் இந்நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

குறைந்த கட்டண விமானச் சேவை

குறைந்த கட்டண விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ ஏர் ஆகிய நிறுவனங்களும் பயணிகளை ஈர்ப்பதில் திறம்பட செயல்பட்டு வருகின்றன. கோ ஏர் நிறுவனத்தின் விமான பயணிகள் எண்ணிக்கை, நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் சுமார் மூன்று மடங்கு (84,000 பயணிகள்) அதிகரித்து 2.11 லட்சம் பயணிகளாக உயர்ந்துள்ளது. இது, இந்நிறுவனம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இண்டிகோ நிறுவனம் 5.77 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று (குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்களில்) முதலிடத்தில் உள்ளது. மொத்த பயணிகள் எண்ணிக்கையில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு 14.9 சதவீதமாகும். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களில் பயணம் மேற்கொண்டவர்கள் எண்ணிக்கையும் 4.13 லட்சத்திலிருந்து 4.65 லட்சமாக உயர்ந்துள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Traditional Industry and Small Entrepreneur Development Minister - Douglas Devananda


  EPDP Secretary General Douglas Devananda

Minister and Eelam People's Democratic Party leader Douglas Devananda

இந்திய விமானச் சேவை துறை அமோக வளர்ச்சி அடையும் என மதிப்பீடு

16 மார்ச், 2010

உலகின் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகியவை இந்தியாவில், விமானப் போக்குவரத்து சேவை துறை அமோக வளர்ச்சி அடையும் என மதிப்பீடு செய்துள்ளன. அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்தியா, விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகளை அள்ளித் தரும் சந்தைகளுள் ஒன்றாக திகழும் என கூறியுள்ளன.

புதிய விமானங்கள்

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 1,000-த்துக்கும் அதிகமாக அளவில் புதிய வர்த்தக விமானங்கள் தேவைப்படும் என இந்த சர்வதேச நிறுவனங்கள் மதிப்பீடு செய் துள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 10,000 கோடி டாலர் (சுமார் ரூ.5 லட்சம் கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமான சேவைத் துறை, புதிய விமானங்களுக்கான ஆர்டர்களை, 2011-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து அளிக்கத் தொடங்கும் என போயிங் இந்தியா நிறுவனத்தின் பிரசிடெண்ட தினேஷ் கேஸ்கார் தெரிவித்தார். விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் ஃபிக்கி அமைப்பு இணைந்து நடத்திய சர்வதேச விமான கண்காட்சியில் கலந்து கொண்ட அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

ஏர்பஸ்

ஐரோப்பாவை சேர்ந்த சர்வதேச விமான நிறுவனமான ஏர்பஸ்சும் இந்திய சந்தை குறித்து அதன் ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில், பயணிகள் மற் றும் சரக்கு விமானப் போக்குவரத்தில் விறுவிறுப்பு ஏற்பட உள்ள நிலையில், இந்தியாவுக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் 1,032 புதிய விமானங்கள் தேவைப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றுள் 993 விமானங்கள் பயணிகளுக்கானதாகவும், மீதமுள்ளவை சரக்கு விமானங்களாகவும் இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

புதிய விமானங்களுக்கான தேவைப்பாடு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என ஏர்பஸ் இந்தியா நிறுவனத்தின் துணை பிரசிடெண்ட் (விற்பனை) மிராண்டா மில்ஸ் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. எனவே உள்நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் இந்தியர்கள் மேற்கொள்ளும் விமான பயணங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் உள்நாட்டில் விமானப் போக்குவரத்து 12.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

பயணிகள்

பொருளாதார தேக்கநிலையின் காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக இத்துறை திணறி வந்த வேளையில், கடந்த சில மாதங்களாக விமான பயணிகள் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரம், 2012-க்குள் எழுச்சி அடையும் என்றும், அவ்வாண்டிலிருந்து விமானச் சேவை நிறுவனங்கள் ஏராளமான புதிய விமானங்களுக்கு ஆர்டர்கள் அளிக்கத் தொடங்கும் என்றும் மில்ஸ் தெரிவித்தார்

ஜப்பானில் தொழில் வர்த்தக மாநாடு



டோக்கியோ, ஆசிய பிராந்திய  நாடுகளின் பொருளாதார மாநாடு ஜப்பானில் திங்கள்கிழமை தொடங்கியது. ஜப்பானின் முன்னணி தொழிலகக் கூட்டமைப்பான கியோடோ வர்த்தக சம்மேளனம் இந்த மாநாட்டை நடத்துகிறது.
ஜப்பானின் மிகவும் வலுவான வர்த்தக கூட்டமைப்பாகக் கருதப்படுவது நிப்பான் கெய்டான்ரென். இந்த அமைப்பு கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் 11 நாடுகளைச் சேர்ந்த 13 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்தியா, சீனா, இந்தோனேசியா, தென்கொரியா, சிங்கப்பூர், தாய்வான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றன.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) துணைத் தலைவர் ஹரி எஸ் பாட்டியா தலைமையிலான வர்த்தக் குழு இம்மாநாட்டில் பங்கேற்கிறது.
ஆசிய பிராந்திய நாடுகளிடையே தொழில், வர்த்தக உறவை மேம்படுத்த இம்மாநாடு உதவும் என கருதப்படுகிறது.

இந்திய சமையல் எரிவாயு 55 கோடி பேர் பயன்பாடு

15 மார்ச், 2010



ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் 55 கோடி பேர் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார். குலுக்கல் முறையில் முகவர்களை தேர்வு செய்து கிராமங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும்(ராஜிவ் காந்தி கிராம விதாரக் யோஜனா) திட்டம் ராஜஸ்தானில் நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தை துவக்கி வைத்து மத்திய அமைச்சர் முரளி தியோரா குறிப்பிடுகையில், 'நாடு முழுவதும் 55 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். கிராம மக்களுக்கும் இந்த திட்டம் பயன்பட வேண்டும் என்பதற்காக கிராம முகவர்களை தேர்வு செய்து எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்க உள்ளோம். முதல் கட்டமாக நாடு முழுவதும் 1,266 கிராம பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்க உள்ளோம். ராஜஸ்தானில் மட்டும் 192 இடங்களில் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கப்பட உள்ளது' என்றார்.

அமெரிக்காவில் மூன்று மாதங்களில் 30 வங்கிகள் திவால்



நடப்பு ஆண்டில், இதுவரையிலான காலத்தில், அதாவது சுமார் மூன்று மாதங்களில், அமெரிக்காவில் 30 வங்கிகள் திவால் ஆகியுள்ளன. ஆக, திவால் ஆகும் வங்கிகளின் எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 10 என்ற அளவில் உள்ளது. நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை அங்கு எட்டு வங்கிகள் திவாலாகி உள்ளன.

கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், லெஹ்மன் பிரதர்ஸ் திவால் ஆனதை யடுத்து, அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆவது தொடர்கதையாகி வருகிறது. அம்மாதத் திலிருந்து இதுவரையிலுமாக, அந்நாட்டில் மொத்தம் 184 வங்கிகள் திவாலாகி உள்ளன.

சரிவைச் சந்தித்து வந்த அமெரிக்க பொருளாதாரத்தில், சென்ற சில காலாண்டுகளாக வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. ஆனால், வேலை இழப்பு இன்னும் குறையவில்லை. இதனால், வங்கிகளில் கடன் வாங்கியவர்களால் அதனை சரிவர திரும்ப செலுத்த முடியவில்லை.



பில்கேட்ஸை பின்தள்ளி முதலிடம் பிடித்தார் மெக்சிக்கோ தொழிலதிபர் கார்லஸ் சிலிம்

14 மார்ச், 2010



(நியூயோர்க்)
போர்ப்ஸ் சஞ்சிகையின் கணிப்பின்படி உலக மகாகோடீஸ்வரர்கள்(Billionaire’s list)பட்டியலில் மெக்சிகோ தொழிலதிபர் கார்லஸ் ஸ்லிம் முதலிடத்தைப் பிடித்தார்.
1994ஆம் ஆண்டுக்குப்பின் அமெரிக்கர் அல்லாத ஒருவர் முதலிடத்துக்கு வந்துள்ளார்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 18.5 பில்லியன் டொலர் சொத்து அதிகரிப் புடன் 53.5 பில்லியன் அமெ.டொலர்(6.15 லட்சம் கோடி இலங்கை ரூபாய்) சொத்துடன் முதலிடத்திலும்,
53 பில்லியன் சொத்துடன் மைக்ரோசொப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ் 2-ம் இடத்திலும் ,
முதலீட்டு நிறுவன ஜாம்பவான் வாரன் பப்பட் (43 பில்லியன் டொ லர்) 3-ம் இடத்திலும் உள்ளனர்.
குறைந்தது ஒரு பில்லியன் அமெரிக்க டொலருடையவரே இப் பட்டியல்படி செல்வந்தர்.(ஒரு பில் லியன் அமெரிக்க டொலர் அண் ணளவாக 11 ஆயிரத்து 500 கோடி இலங்கை ரூபாய்கள்)
இந்த ஆண்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.இதில் இந்தியாவின்  ரிலையன்ஸ்   இண்டஸ்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 29 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 4-வது இடத்திலும் ,லண்டன் வாழ் இந்தியரான ஆர்சிலர் உருக்கு ஆலை அதிபர் லட்சுமி மிட்டல் 28.7 பில்லியன்  சொத்து மதிப்புடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
முதலிடத்திலுள்ள டெலிமேக்ஸ் தொலைத்தொடர்பு நிறுவன அதிபர்  கார்லஸ் ஸ்லிம் அண்மையில் நியூயோர்க் ரைம்ஸ் பங்குகளை வாங்கியதே சொத்து உயரக் காரணம் எனவும் ,பில்கேட்ஸ் மற்றும் வாரன் பப்பட் ஆகியோர்தமது சொத்துக்களை அதிகளவில் நன்கொடைகளாக வழங்கியமையும் முதலிடங்களை தவறவிடக் காரணம் எனவும் போர் ப்ஸ் சஞ்சிகையின் தலைமை அதிகாரி  ஸ்ரீவ் போர்பஸ் தெரிவித்துள்ளார்.
கோடீஸ்வரர் பட்டியலில் 1011 பேர் இடம்பெற்றுள்ளனர்.234 ஆசியர்களையும் ,248 ஐரோப்பியர்களையும் கொண்ட இப் பட்டியலில் ஆசியர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது.இதில் 41இந்தியர்களும் 60 சீனர்களும் அடங்குவர்.
 இப்பட்டியலில்,பேஸ்புக் நிறுவுனரான மார்கே(4 பில்.அமெ. டொலர்) இளம் வயது (25) கோடீஸ்வரராவார்.
கோடீஸ்வரர்கள் பட்டியலில் 55 நாடுகள் இடம்பிடித்துள்ளன.இதில் புதிதாக பாகிஸ்தானும் பின்லாந்தும் நுழைந்துள்ளன.
2010இல் கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரமாக நியூயோர்கே முன்னிலையில் உள்ளது. இங்கு 60 செல்வந்தர்களும், மொஸ்கோ 50செல்வந்தர்களுடன் 2-வது இடத்திலும் லண்டன் 32 செல்வந்தர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

மும்பையில் தொழில்துறை சர்வதேச கண்காட்சி


மும்பை, மார்ச் 13: சர்வதேச தொழில்துறை கண்காட்சி மும்பையில் இம்மாதம் 18-ம் தேதி தொடங்குகிறது. "7-வது டைமோல்ட் இந்தியா' என்ற பெயரிலான இக்கண்காட்சி மும்பையின் கிழக்குப் பகுதியில் உள்ள கோரேகானில் நான்கு நாள்கள் நடைபெற உள்ளது.

  இக்கண்காட்சியில் சிங்கப்பூர், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஹாங்காங், இத்தாலி, ஜப்பான், கொரியா, பிலிப்பின்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, தாய்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
  மேம்பட்ட தொழில்நுட்ப பின்னணியில் செயல்படும் இயந்திரங்கள், கருவிகள் ஆகியன இக்கண்காட்சியில் இடம்பெறும்.
இதன் மூலம் தொழில்துறையினர் குறைந்த செலவில் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். தொழில்துறையினருக்குத் தேவையான கருவிகள் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
2008-ம் ஆண்டில் ரூ. 9,190 கோடியாக இருந்த வர்த்தகம் கடந்த ஆண்டு ரூ. 13,280 கோடியாக உயர்ந்துள்ளது. வரும் நிதி ஆண்டில் இது ரூ. 16,080 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்களின் வர்த்தகம் வரும் ஆண்டில் ரூ. 3,365 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
÷சென்னை, பெங்களூர், தில்லி, புணே, ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் செயல்படும் சர்வதேச நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.
கண்காட்சியுடன் கருத்தரங்கும், இயந்திரங்களின் செயல் விளக்கமும் நடைபெறும்.

உலக பொருளாதாரத்தில் முன்னேற்றம் சீனாவின் ஏற்றுமதி 46 சதவீதம் உயர்வு

13 மார்ச், 2010

உலக பொருளாதாரத்தில், முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால், சர்வதேச அளவில் நுகர்வோர் சாதனங்கள், கார்கள் விற்பனை உயர்ந்து வருகிறது. இதனையடுத்து, நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 45.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - சீனா

இந்தியாவுடன் ஒப்பிடும்போது, சீனா அதன் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியை முற்றிலும் சார்ந்துள்ளது. சென்ற 2008-ஆம் ஆண்டில், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட உருக்குலைவால், சீனாவின் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடும் வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், பொருளாதாரத்தில் இயல்புநிலைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

சென்ற பிப்ரவரி மாதத்தில், சீனாவின் இறக்குமதியும் 44.70 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, அந்நாட்டு நிறுவனங்கள், பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டு, விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. நடப்பு 2010-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், சீனாவின் ஏற்றுமதி 31.40 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக அளவில், ஏற்றுமதியில் ஜெர்மனி மிகப் பெரிய நாடாக திகழ்ந்து வந்தது. சென்ற 2009-ஆம் ஆண்டில், ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.


வர்த்தக பற்றாக்குறை

இந்தியாவில், ஏற்றுமதியைக் காட்டிலும், இறக்குமதி அதிகமாக உள்ளதால், வர்த்தக பற்றாக்குறை நிலவி வருகிறது. அதேசமயம், சீனாவில் இறக்குமதியைக் காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக உள்ளதால், இந்நாட்டின் வர்த்தகத்தில் உபரி நிலை உள்ளது. சீனாவின் வர்த்தக உபரி, நடப்பு ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் குறைந்துள்ளது. இது, அந்நாட்டு நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிக அளவில் இறக்குமதி செய்து வருவதை வெளிப்படுத்துகிறது.

நடப்பு நிதி ஆண்டில் மாருதி கார்கள் விற்பனை 10 லட்சத்தை தாண்டும்

நடப்பு 2009-10-ஆம் நிதி ஆண்டில், மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 10 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் கார்கள் உற்பத்தியும் 10 லட்சத்தை தாண்ட உள்ளது.

26 ஆண்டுகள்

மாருதி நிறுவனம் இந்தியாவில் செயல்பாடுகளை தொடங்கி சுமார் 26 ஆண்டுகள் ஆகின்றன. இது தொடங்கப்பட்டபோது, ஜப்பானின் சுசுகி மற்றும் இந்திய அரசின் கூட்டு நிறுவனமாக இருந்தது. அந்த கால கட்டத்தில், இந்தியாவில் கார்கள் விற்பனை ஆண்டுக்கு 40,000 என்ற அளவில்தான் இருந்தது. தற்போது உள்நாட்டில் கார்கள் விற்பனை ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது.

ஓர் ஆண்டில் 10 லட்சம் என்ற சாதனை அளவை எட்ட உள்ளதையடுத்து, மாருதி நிறுவனம் ஏற்கனவே இந்த பெருமைக்கு சொந்தமான டொயோட்டா, ஜெனரல் மோட்டார்ஸ், வோல்ஸ்வேகன், ஃபோர்டு மற்றும் ரினால்ட் ஆகிய பிரபல நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறுகிறது.

உற்பத்தி-விற்பனை

2009 ஏப்ரல் முதல் 2010 பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் மாருதி நிறுவனத்தின் உற்பத்தி 9.31 லட்சம் கார்களாக உள்ளது. இதே காலத்தில் 9.23 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய இரண்டும் இம்மாதம் 15-ந் தேதி வரையிலான காலத்தில் 10 லட்சத்தை தாண்டி விடும் என மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்தார்.

உள்நாட்டில் கார்கள் சந்தையில் மாருதி நிறுவனத்தின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் உள்ளது. ஆக, இந்நிறுவனத்தின் ஆதிக்கம் வலுவாக உள்ளது. பல்வேறு நிறுவனங்கள், சிறிய வகை கார்கள் தயாரிப்பில் களம் இறங்கி வருவதால், இந்நிறுவனம் தற்போது போட்டிகளை எதிர்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டின் புதிய சட்டசபையின் சிறப்பு அம்சங்கள்


சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபை வளாகத்துக்கு ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது. 9 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் திராவிடப் பழமையும், நவீன தொழில் நுட்ப புதுமையும் பின்னிப் பிணைந்த பிரமாண்ட கட்டிடமாக புதிய சட்டசபை வளாகம் மிளிர்கிறது.
 2008-ம் ஆண்டு நவம் பர் மாதம் 12-ந்தேதி புதிய சட்டசபை வளாக கட்டுமான வேலைகள் தொடங்கின. திட்டமிட்ட காலத்துக்குள் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
 புதிய சட்டசபை வளாகம் மொத்தம் 4 வட்டங்கள் கொண்ட கட்டிடங்களாகும்.
 அதில் முதல் மற்றும் இரண்டாம் வட்டத்தின் மேல் தளத்தில் பசுமையான தோட்டம் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் முதல் பசுமை கட்டிடம் என்ற சிறப்பை புதிய சட்டசபை வளாகம் பெறுகிறது.
 முதல் மற்றும் இரண்டாம் வட்டத்தின் வெளிப்புறத்தில் வாகனங்கள் செல்ல வழி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழி மீது அமைக்கப்படும் கூரையானது புல்வெளி, மற்றும் செடிகள் கொண்டதாக இருக்கும். இதனால் முதல் மற்றும் இரண்டாவது வட்ட கட்டிடம் எப்போதும் பச்சை பசேலன பசுமையாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். கட்டிடத்துக்குள்ளும் பசுமை உணர்வு ஒரு ரம்மியமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
கட்டிடத்தில் குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் மின் விளக்குகள் பொருத்தப்படுகிறது. இது மற்ற கட்டிடங்களுக்கு முன் உதாரணமாக இருக்கும்.
 கட்டிடத்திற்குள் சட்டப் பேரவை 120 அடி விட்டம் கொண்ட வட்ட வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. அதன் மீது கட்டப்பட இருக்கும் கூரை 100 அடி உயரம் கொண்ட குவிமுக மாடமாக இருக்கும்.
 சட்டமன்ற கூட்ட அரங்குக்குள் தாராளமாக 300 பேர் அமரலாம்.
 பிளாக் ஏ அதாவது முதல் வட்ட கட்டிடத்தில் இந்த சட்டமன்றம் இயங்கும். இந்த பிளாக் சுமார் 60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
 இந்த “ஏ” பிளாக் கட்டிட வளாகத்துக்குள் சட்டமன்ற கூட்ட அரங்கு தவிர சபாநாயகர் அலுவலகம், சட்டசபை நூலகம், கவர்னர் அலுவலகம், கூட்ட அரங்கு, முதல்- அமைச்சரின் அலுவலகம், முதல்- அமைச்சரின் செயலகம், அமைச்சர்களின் அலுவலகங்கள், தலைமைச் செயலாளர் அலுவலகம் ஆகியவை இருக்கும்.
 இவை தவிர பொதுத்துறை, நிதித்துறை, உள்துறை, சட்டத்துறை உள்பட 6 துறைகளின் அலுவலகங்களும் “ஏ” பிளாக்கில் இயங்கும்.
 கட்டிடம் முழுவதும் திராவிடக் கலாச்சாரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தரை, தூண்கள், கதவு மேற்புறப் பலகைகள், கட்டிடச் சுவர்கள் என எங்கு பார்த்தாலும் தமிழர்களின் பாரம்பரிய சிறப்பான கோலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 சக்கர வடிவத்தின் அடிப்படையில் கோல சாஸ்தரம் சேர்க்கப்பட்டு கட்டிடம் எழுப்பப்படும் விதம் கண்டு மேலை நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள்.
 கட்டிடத்தின் உள்பகுதிக்குள் இயற்கையான காற்று வரவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக நமது பாரம்பரிய சிற்பக்கலையான கருங்கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 கட்டிடத்தின் வெளிப்பகுதியில் வேதியியல் வண்ணக் கலைவை எதுவும் பூசப்படவில்லை. அதற்கு பதில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளன. மெருகேற்றப்பட்ட கருங்கல் பலகைகளாலும் சுற்றுச் சுவர் மூடப்பட்டுள்ளது. இது கட்டிடத்துக்கு அழகு தருவதுடன் சுகாதாரத்துக்கும் உறுதியானதாக இருக்கும்.
கட்டிடம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் கழிவு நீர் வீணாகாது. அதை சுத்திகரித்து சட்டசபை வளாக புல்வெளி மற்றும் செடிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
 சட்டசபை வளாகத்தை மக்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்து செல்ல வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அதை கருத்தில் கொண்டு சட்டசபை வளாகத்தில் பப்ளிக் பிளாசா கட்டப்பட்டுள்ளது. இது திறந்த வெளிப்பூங்கா போல இருக்கும்.
சட்டப் பேரவை வளாகத்தில் பப்ளிக் பிளாசாதான் அதிக பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் அந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
 பப்ளிக் பிளாசா பகுதியில் கலைச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிக்கு பொதுமக்கள் வந்து செல்ல போலீஸ் கெடுபிடி இருக்காது. எனவே மக்கள் பப்ளிக் பிளாசாவில் மாலை நேரத்தில் அமர்ந்து சட்டசபை அழகை கண்டு ரசிக்கலாம்.
தமிழ்நாட்டின் தனித்துவம் கொண்ட தன்னிரகற்ற அடையாளச் சின்னமாகப்போகும் இந்த சட்டசபை வளாகத்தில் ஒரு திறந்த வெளி அருங்காட்சியகமும் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் சட்டசபை வளாகம் சுற்றுலா தலம்போல மாறும்.
சட்டசபை வளாக நுழைவு வாயிலில் 4 செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 4 வட்ட வடிவக் கட்டிடங்களை அடையாளப்படுத்துகின்றன.
 4 வட்ட வடிவ கட்டிடங்களில் மக்கள் வளாகம் மிகப்பெரியது. எம்.எல்.ஏ.க்கள் அமரும் சட்டமன்ற அரங்கு 2-வது பெரிய கட்டிடமாக உள்ளது. மூன்றாவது இடத்தை நூலக கட்டிடம் பெற்றுள்ளது. இது நீதித்துறையை அடையாளம் காட்டும் வகையில் இருக்கும்.
முதல்வரின் அலுவலகம் உள்ள வட்ட வடிவக் கட்டிடம்தான் 4 பிரிவுகளில் மிகச்சிறியது. நிர்வாகம் மிக எளிமையாக நடைபெற வேண்டும் என்று பொருள்படும் வகையில் இது கட்டப்படுகிறது.
 எனவே சட்டசபை வளாகத்தில் உள்ள 4 பிரிவுகளும் மக்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதித்துறை, நிர்வாகத்துறை என்ற வரிசையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தனை சிறப்புகள் உள்ளதால் உலகின் முதல் ஆட்சி மன்ற பசுமைக் கட்டிடம் என்ற சிறப்பை புதிய சட்டசபை வளாகம் பெற்றுள்ளது. மேலும் அமெரிக்க, இந்திய பசுமை கட்டிட கழகங்களின், தங்கதர நிர்ணயச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சட்டசபை வளாகத்தில் மறு சுழற்சி முறையில் தண்ணீர் சுத்திகரித்து பயன்படுத்தப்படும். தினமும் 2.55 லட்சம் லிட்டர் தண்ணீர் மறு சுழற்சி மூலம் கிடைக்கும்.



 புதிய சட்டசபை வளாகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டப்படி மழைத்தண்ணீர் நிலத்துக்குள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
 கட்டிடத்தின் சுற்று சுவர்களில் கோலம் வடிவங்கள் செய்யப்பட்டுள்ளதால், அந்த கோல ஓட்டை வழியாக காற்றும், வெளிச்சமும் வந்து செல்லும். இதனால் 60 சதவீத வெப்பம் கட்டிடத்தின் உள்ளே வராது. இது கட்டிடத்தை எப்போதும் குளிச்சியாக வைத்திருக்க உதவும்.
கட்டிடத்தின் கழிவறைகளில் குறைந்த அளவு தண்ணீர் தானியங்கி மூலம் கழிக்கப்படும். ஏதாவது ஒரு அறையில் ஆட்கள் இல்லை என்றால் மின் விளக்குகள், மின் விசிறிகள் தானாக தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். இதனால் மின் சிக்கனம் அதிகமாக இருக்கும்.
பொதுமக்கள் வசதிக்காக உருவாக்கப்படும் பப்ளிக் பிளாசாவில் நிறுவப்படும் மண் சிற்பங்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் புல் வெளிகள், செடி, கொடிகள், நமது தட்ப- வெட்ப நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதற்காக, சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளன.
சட்டமன்ற அரங்கு முழுவதும் சணலால் தயாரிக்கப்பட்ட தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன. இது அழகு தருவதோடு சுகாதாரத்துக்கும் ஏற்றது.
கட்டிடத்தின் உட்புறங்களில் கண்கவர் வகையில் டெரகோட்டா மூலம் உள் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் திருவாரூர் தேர் நிச்சயம் எல்லாரையும் கவரும்.
புதிய சட்டசபை வளாகத்துக்காக தனி மின் நிலையம் ஒன்றை மின் வாரியம் அமைத்து கொடுத்துள்ளது. இது 6 கிரவுண்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
 புதிய சட்டமன்ற அரங்குக்கான அனைத்து இருக்கைகளையும் டான்சி நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது.
 பழைய சட்டசபையில் உள்ள சபாநாயகர் இருக்கை பாரம்பரிய சிறப்பு கொண்டதாகும். எனவே அதன் பெருமையை நீட்டிக்க செய்யும் வகையில் அதே போன்ற தோற்றத்தில் சபாநாயகரின் புதிய இருக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டசபை வளாகத்தின் உயரம் 100 அடி. இதற்காக சுமார் 50 லட்சம் செங்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 48 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. 18 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு மார்பிள் கற்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மொத்தம் ஒரு கோடியே 12 லட்சம் மனித உழைப்பு மணி நேரம், கட்டிட உருவாக்கலுக்கு செலவழிக்கப்பட்டுள்ளது.கட்டிட வளாகம் முழுவதிலும் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு வளர்க்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கட்டிடம் கட்டும்போது கிடைத்த கழிவுகளைக் கொண்டே புதிய சட்டசபை வளாகத்தின் சுற்றுப் புற தரைத்தளம் சமன் செய்யப்பட்டுள்ளது.
பாட்டரி கார்கள் வசதிக்காக சட்டசபை வளாகத்தில் 21 இடங்களில் பாட்டரி ரீ-சார்ஜ் வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த சட்டசபை வளாகத்தில் எல்லா நவீன வசதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.
15 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிருந்தனர். தற்போது 18 மாதங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. முதல்- அமைச்சர் கருணாநிதி தினம், தினம் கட்டிடப் பணிகளை பார்வையிட்டு கட்டிடத்தின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும் தனிக்கவனம் செலுத்தினார். ஒரு சிற்பியைப் போல அவர் இந்த கட்டிடத்துக்காக அல்லும் பகலும் அயர்வில்லாமல் பணியாற்றினார்.
முதல்- அமைச்சர் கருணாநிதியின் கை வண்ணத்தில் தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ கலைக்கூடங்கள், நினைவு சின்னங்கள், நெஞ்சையள்ளும் சிலைகள், சிற்பங்கள் உள்ளன.
ஆனால் புதிய சட்டசபை கட்டிடம் முதல்- அமைச்சர் கருணாநிதியின் பெரும்புகழ் எனும் பொன் மகுடத்தில் வைரக்கல்லாக என்றென்றும் ஒளிவீசும்


.

உலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப் 10 ல் முகேஷ் - லட்சுமி மிட்டல்

10 மார்ச், 2010




நியூயார்க்: உலக கோடீஸ்வரர் டாப்-10 பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி, இரும்பு உலகின் ராஜா என வர்ணிக்கப்படும் லட்சுமி மிட்டல் ஆகியோர் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


ரிலையன்ஸ் பங்குதாரர் அனில் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். பல இந்தியர்கள் கடந்த கால பொருளாதார வீழ்ச்சியினால் பிசினஸ்சில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். உலக கோடீஸ்வரர்களில் பட்டியலில் இந்தியர்கள் பலர் தங்களது நிலையை இழந்து, ஆசியாவிலேயே இந்தியா நீண்ட காலம் டாப்பில் இருந்து வந்தது மாறி சீனா முன்னுக்கு சென்றுள்ளது என்றும் நியூயார்க் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள பணக்காரர்கள் சிலர் இந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.
நியூயார்க்கில் உள்ள போர்பஸ் பத்திரிகை நிறுவனம், 2010 ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆயில் நிறுவனங்கள் நடத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வரும் முகேஷ் அம்பானி ( 29 பில்லியன் டாலர் ) சொத்து மதிப்பு கொண்ட இவர் 4 வது இடத்தை பிடித்துள்ளார். எஃகு உலகில் கொடிக்கட்டி பறக்கும் லட்சுமி மிட்டல் ( 28. 7 பில்லியன் டாலர் ) சொத்து கொண்ட இவர் 5 வது இடத்தை பிடித்துள்ளார்.
ரிலையன்ஸ் கம்னியூகேஷன், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் நடத்திவரும் அனில் அம்பானி கடும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் தனது சொத்தில் 76 சதவீதம் நஷ்டத்தை கண்டுள்ளார். எனவே இவர் இந்த பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பபட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

மெக்சிகன் டெலிகாம் தொழிலதிபர் கார்லஸ் சிலிம் 53,.5 பில்லியன் டாலர் சொத்து கொண்டவர் உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார், மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் 2 வது இடத்தையும், வார்ரன் பப்பட் 3 வது இடத்தையும் பிடித்துள்ளார். உலக கோடீஸ்வரர் பட்டியில் தற்போது பாகிஸ்தானும், பின்லாந்தும் நுழைந்துள்ளது என்பது புதிய தகவல்.

சென்னை தங்கம்,வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலையில் அதிக மாற்றமில்லை.
ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை நேற்று ரூ. 1561ஆக இருந்தது. இது இன்று காலை நிலவரப் படி ரூ. 1562ஆகவும், மாலையில் ரூ. 1561ஆகவும் இருந்தது.
24 காரட் தங்கத்தின் விலை நேற்று ரூ. 16,780ஆக இருந்தது. இது இன்று காலை நிலவரப் படி ரூ.16,800ஆகவும், மாலையில் ரூ. 16,790ஆகவும் உள்ளது.
இன்று வெள்ளியின் விலை சிறிது உயர்ந்துள்ளது.
பார் வெள்ளியின் விலை நேற்று ரூ. 27,595ஆக இருந்தது. இது இன்று காலையில் ரூ. 27,925 ரூபாயாகவும், மாலையில் ரூ. 27950ஆகவும் இருந்தது.
இதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) நேற்று ரூ. 29.50 ஆக இருந்தது. இது காலையில் ரூ. 29.85ஆகவும், மாலையில் ரூ. 29.90ஆகவும் காணப்பட்டது.