உலக பொருளாதாரத்தில், முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால், சர்வதேச அளவில் நுகர்வோர் சாதனங்கள், கார்கள் விற்பனை உயர்ந்து வருகிறது. இதனையடுத்து, நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 45.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - சீனா
இந்தியாவுடன் ஒப்பிடும்போது, சீனா அதன் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியை முற்றிலும் சார்ந்துள்ளது. சென்ற 2008-ஆம் ஆண்டில், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட உருக்குலைவால், சீனாவின் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடும் வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், பொருளாதாரத்தில் இயல்புநிலைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகிறது.
சென்ற பிப்ரவரி மாதத்தில், சீனாவின் இறக்குமதியும் 44.70 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, அந்நாட்டு நிறுவனங்கள், பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டு, விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. நடப்பு 2010-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், சீனாவின் ஏற்றுமதி 31.40 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலக அளவில், ஏற்றுமதியில் ஜெர்மனி மிகப் பெரிய நாடாக திகழ்ந்து வந்தது. சென்ற 2009-ஆம் ஆண்டில், ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை
இந்தியாவில், ஏற்றுமதியைக் காட்டிலும், இறக்குமதி அதிகமாக உள்ளதால், வர்த்தக பற்றாக்குறை நிலவி வருகிறது. அதேசமயம், சீனாவில் இறக்குமதியைக் காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக உள்ளதால், இந்நாட்டின் வர்த்தகத்தில் உபரி நிலை உள்ளது. சீனாவின் வர்த்தக உபரி, நடப்பு ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் குறைந்துள்ளது. இது, அந்நாட்டு நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிக அளவில் இறக்குமதி செய்து வருவதை வெளிப்படுத்துகிறது.
வென்றது சிஎஸ்கே: ஒற்றைக் கையில் சிக்சர் அடித்த வின்டேஜ் தோனி
-
கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் பவர் பிளேயில் விக்கெட் இழக்காத லக்னௌ அணி
இன்று இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
1 மணிநேரம் முன்பு