இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

நடப்பு நிதி ஆண்டில் மாருதி கார்கள் விற்பனை 10 லட்சத்தை தாண்டும்

13 மார்ச், 2010

நடப்பு 2009-10-ஆம் நிதி ஆண்டில், மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 10 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் கார்கள் உற்பத்தியும் 10 லட்சத்தை தாண்ட உள்ளது.

26 ஆண்டுகள்

மாருதி நிறுவனம் இந்தியாவில் செயல்பாடுகளை தொடங்கி சுமார் 26 ஆண்டுகள் ஆகின்றன. இது தொடங்கப்பட்டபோது, ஜப்பானின் சுசுகி மற்றும் இந்திய அரசின் கூட்டு நிறுவனமாக இருந்தது. அந்த கால கட்டத்தில், இந்தியாவில் கார்கள் விற்பனை ஆண்டுக்கு 40,000 என்ற அளவில்தான் இருந்தது. தற்போது உள்நாட்டில் கார்கள் விற்பனை ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது.

ஓர் ஆண்டில் 10 லட்சம் என்ற சாதனை அளவை எட்ட உள்ளதையடுத்து, மாருதி நிறுவனம் ஏற்கனவே இந்த பெருமைக்கு சொந்தமான டொயோட்டா, ஜெனரல் மோட்டார்ஸ், வோல்ஸ்வேகன், ஃபோர்டு மற்றும் ரினால்ட் ஆகிய பிரபல நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறுகிறது.

உற்பத்தி-விற்பனை

2009 ஏப்ரல் முதல் 2010 பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் மாருதி நிறுவனத்தின் உற்பத்தி 9.31 லட்சம் கார்களாக உள்ளது. இதே காலத்தில் 9.23 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய இரண்டும் இம்மாதம் 15-ந் தேதி வரையிலான காலத்தில் 10 லட்சத்தை தாண்டி விடும் என மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்தார்.

உள்நாட்டில் கார்கள் சந்தையில் மாருதி நிறுவனத்தின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் உள்ளது. ஆக, இந்நிறுவனத்தின் ஆதிக்கம் வலுவாக உள்ளது. பல்வேறு நிறுவனங்கள், சிறிய வகை கார்கள் தயாரிப்பில் களம் இறங்கி வருவதால், இந்நிறுவனம் தற்போது போட்டிகளை எதிர்கொண்டு வருகிறது.