இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

17 மார்ச், 2010



தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள விறுவிறுப்பால் விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில் இதில் 16 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நடப்பு 2010-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் விமான பயணிகள் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்து 67.61 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற 2008-ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட உருக்குலைவால், இழப்பினைச் சந்தித்து வந்த இந்திய விமான போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்தியாவில் விமானங்களில் பயணித்தவர்கள் எண்ணிக்கை சென்ற பிப்ரவரி மாதத்தில், 38.60 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 33.36 லட்சமாக இருந்தது.

ஜெட் ஏர்வேஸ்

நரேஸ் கோயெல் தலைமையின் கீழ் செயல்படும் ஜெட் ஏர்வேஸ் (ஜெட் லைட் உள்பட) நிறுவனம் சென்ற பிப்ரவரி மாதத்தில் 10.08 லட்சம் பயணிகளை சுமந்து சென்றுள்ளது. மொத்த விமான பயணிகளின் எண்ணிக்கையில் 26.1 சதவீத பங்களிப்பை பெற்று இந்நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

இந்நிறுவனத்திற்கு அடுத்தபடியாக விஜய் மல்லையா தலைமையின் கீழ் செயல்படும் கிங் ஃபிஷர் நிறுவனம் 22.7 சதவீத பங்களிப்பைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் விமானங்களில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 8.77 லட்சமாகும்.

ஏர் இந்தியா

சென்ற பிப்ரவரி மாதத்தில் பொதுத்துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 15.5 சதவீதம் அதிகரித்து 6.63 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அம்மாதத்தில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதில் இந்நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

குறைந்த கட்டண விமானச் சேவை

குறைந்த கட்டண விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ ஏர் ஆகிய நிறுவனங்களும் பயணிகளை ஈர்ப்பதில் திறம்பட செயல்பட்டு வருகின்றன. கோ ஏர் நிறுவனத்தின் விமான பயணிகள் எண்ணிக்கை, நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் சுமார் மூன்று மடங்கு (84,000 பயணிகள்) அதிகரித்து 2.11 லட்சம் பயணிகளாக உயர்ந்துள்ளது. இது, இந்நிறுவனம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இண்டிகோ நிறுவனம் 5.77 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று (குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்களில்) முதலிடத்தில் உள்ளது. மொத்த பயணிகள் எண்ணிக்கையில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு 14.9 சதவீதமாகும். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களில் பயணம் மேற்கொண்டவர்கள் எண்ணிக்கையும் 4.13 லட்சத்திலிருந்து 4.65 லட்சமாக உயர்ந்துள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Traditional Industry and Small Entrepreneur Development Minister - Douglas Devananda


  EPDP Secretary General Douglas Devananda

Minister and Eelam People's Democratic Party leader Douglas Devananda