இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

இந்திய விமானச் சேவை துறை அமோக வளர்ச்சி அடையும் என மதிப்பீடு

16 மார்ச், 2010

உலகின் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகியவை இந்தியாவில், விமானப் போக்குவரத்து சேவை துறை அமோக வளர்ச்சி அடையும் என மதிப்பீடு செய்துள்ளன. அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்தியா, விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகளை அள்ளித் தரும் சந்தைகளுள் ஒன்றாக திகழும் என கூறியுள்ளன.

புதிய விமானங்கள்

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 1,000-த்துக்கும் அதிகமாக அளவில் புதிய வர்த்தக விமானங்கள் தேவைப்படும் என இந்த சர்வதேச நிறுவனங்கள் மதிப்பீடு செய் துள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 10,000 கோடி டாலர் (சுமார் ரூ.5 லட்சம் கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமான சேவைத் துறை, புதிய விமானங்களுக்கான ஆர்டர்களை, 2011-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து அளிக்கத் தொடங்கும் என போயிங் இந்தியா நிறுவனத்தின் பிரசிடெண்ட தினேஷ் கேஸ்கார் தெரிவித்தார். விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் ஃபிக்கி அமைப்பு இணைந்து நடத்திய சர்வதேச விமான கண்காட்சியில் கலந்து கொண்ட அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

ஏர்பஸ்

ஐரோப்பாவை சேர்ந்த சர்வதேச விமான நிறுவனமான ஏர்பஸ்சும் இந்திய சந்தை குறித்து அதன் ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில், பயணிகள் மற் றும் சரக்கு விமானப் போக்குவரத்தில் விறுவிறுப்பு ஏற்பட உள்ள நிலையில், இந்தியாவுக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் 1,032 புதிய விமானங்கள் தேவைப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றுள் 993 விமானங்கள் பயணிகளுக்கானதாகவும், மீதமுள்ளவை சரக்கு விமானங்களாகவும் இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

புதிய விமானங்களுக்கான தேவைப்பாடு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என ஏர்பஸ் இந்தியா நிறுவனத்தின் துணை பிரசிடெண்ட் (விற்பனை) மிராண்டா மில்ஸ் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. எனவே உள்நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் இந்தியர்கள் மேற்கொள்ளும் விமான பயணங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் உள்நாட்டில் விமானப் போக்குவரத்து 12.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

பயணிகள்

பொருளாதார தேக்கநிலையின் காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக இத்துறை திணறி வந்த வேளையில், கடந்த சில மாதங்களாக விமான பயணிகள் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரம், 2012-க்குள் எழுச்சி அடையும் என்றும், அவ்வாண்டிலிருந்து விமானச் சேவை நிறுவனங்கள் ஏராளமான புதிய விமானங்களுக்கு ஆர்டர்கள் அளிக்கத் தொடங்கும் என்றும் மில்ஸ் தெரிவித்தார்