இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

வங்கிச் சேவையில் களம் இறங்க பிர்லா, அனில் அம்பானி திட்டம்

1 மார்ச், 2010

தனியார் துறையினருக்கும் புதிதாக வங்கிகள் தொடங்க உரிமங்கள் வழங்குவது குறித்து பாரத ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யும் என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். இதனையடுத்து, பிர்லா, அனில் அம்பானி மற்றும் பஜாஜ், ஸ்ரீராம் குழும நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் வங்கிச் சேவையில் களமிறங்க அணிவகுத்து நிற்கின்றன.

குமார் மங்களம் பிர்லா

வங்கி ஒன்றை தொடங்குவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருப்பதாக ஆதித்ய பிர்லா குழும நிறுவனத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா தெரிவித்தார்.

வங்கி தொடங்குவதற்கான உரிமத்தை பெற விண்ணப்பம் செய்யப்படும் என்று இக்குழு மத்தின் நிதிச் சேவைகள் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் ஸ்ரீனிவாசன் கூறினார்.

எனினும், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் தொடங்குவதற்கான அடிப்படை விதிமுறைகள் தளர்த்தப்பட மாட்டாது என்று பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோரட் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், புதிய வங்கிகள் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நிகர சொத்து மதிப்பை ரூ.300 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக பாரத ரிசர்வ் வங்கி உயர்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ரெலிகேர்

ரெலிகேர் நிறுவனமும் வங்கிச் சேவையில் களமிறங்க முடிவு செய்துள்ளது. ரெலிகேர் ஹோல்டிங் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.2,500 கோடியாக உள்ளது. எனவே, நிறுவனத்திற்கு மூலதனத்தை கொண்டு வருவதில் எவ்வித சிரமும் ஏற்படாது என்று ரெலிகேர் என்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனர் சுனில் கோத்வானி தெரிவித்தார்

தனியார் நிறுவனங்களும் வங்கிச் சேவைகளில் களம் இறங்கும் என்று எதிர்பார்ப்பால், வெள்ளிக்கிழமை அன்று, ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரெலிகேர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.