அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 16 இந்திய நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு, சென்ற வாரத்தில் 400 கோடி டாலர் (சுமார் ரூ.18,500 கோடி) உயர்ந்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிப் பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக 205 கோடி டாலர் (சுமார் ரூ.9,500 கோடி) அதிகரித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு 161 கோடி டாலர் அதிகரித்து 3,247 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதர தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களான விப்ரோ மற்றும் மகிந்திரா சத்யம் ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பு மொத்தத்தில் 39.40 கோடி டாலர் உயர்ந்துள்ளது. பத்னி கம்ப்ïட்டர் சிஸ்டம் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 2 கோடி டாலர் அதிகரித்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ், டாட்டா கம்ïனிகேஷன்ஸ் மற்றும் எச்.டீ.எஃப்.சி. வங்கி ஆகியவற்றின் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 65.80 கோடி டாலர் சரிவடைந்துள்ளது. இவற்றுள் எச்.டீ.எஃப்.சி. வங்கிதான்அதிகபட்ச சரிவை சந்தித்துள்ளது.
டிரம்பின் வரி யுத்தத்திற்கு நடுவே சீனாவில் புதின், மோதி - என்ன நடக்கிறது?
-
ரஷ்ய அதிபர் புதினும் இந்திய பிரதமர் மோதியும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள்
உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ளனர். அமெரிக்காவின் வரி யுத்தத்திற்கு
நடுவே...
1 மணிநேரம் முன்பு