மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சென்ற வெள்ளிக்கிழமை அன்று, நாட்டின் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. அன்றைய தினத்தில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.70,000 கோடி அதிகரித்து ரூ.58.80 லட்சம் கோடியாக உயர்ந்தது.
முகேஷ் அம்பானி
குறிப்பாக, `மெகா' கோடீஸ்வரர்களின் நிகர சொத்து மதிப்பு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. அன்றைய தினத்தில், முகேஷ் அம்பானி கொண்டுள்ள பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ.2,424 கோடி அதிகரித்துள்ளது. இவருடைய சகோதரர் அனில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,987 கோடி உயர்ந்துள்ளது.
பிர்லா குழும நிறுவனங்களின் தலைவர் கே.எம். பிர்லா மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் ஆகியோர் கொண்டுள்ள பங்குகளின் நிகர மதிப்பு முறையே ரூ.1,085 கோடி மற்றும் ரூ.535 கோடி உயர்ந்துள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை அன்று டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை வியக்கத்தக்க வகையில் 6.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதர டாட்டா குழும நிறுவனங் களின் பங்குகளின் விலையும் சிறப்பான அளவில் உயர்ந்தது. இதனையடுத்து, ஒட்டு மொத்தத்தில் டாட்டா குழும நிறுவனங்களின் பங்குகளின் நிகர சந்தை மதிப்பு ரூ.87 கோடி உயர்ந்துள்ளது.
ஐ.டி. துறை
தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு சலுகைகள் வழங்காததால், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட ஐ.டி. நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது. இதனையடுத்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் என்.ஆர். மூர்த்தியின் நிகர சொத்து மதிப்பில் ரூ.40 கோடி சரிவு ஏற்பட்டது.
டிரம்பின் வரி யுத்தத்திற்கு நடுவே சீனாவில் புதின், மோதி - என்ன நடக்கிறது?
-
ரஷ்ய அதிபர் புதினும் இந்திய பிரதமர் மோதியும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள்
உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ளனர். அமெரிக்காவின் வரி யுத்தத்திற்கு
நடுவே...
1 மணிநேரம் முன்பு