இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

ஐ.சி.ஏ.ஐ. வளாகத் தேர்வு சி.ஏ. படித்த மாணவருக்கு மாதம் ரூ.5.83 லட்சம் சம்பளத்தில் வேலை

10 மார்ச், 2010

இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் (ஐ.சி.ஏ.ஐ) பயிலகத்தில் நடைபெற்ற வளாகத் தேர்வில், சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் என்று அழைக்கப்படும் சி.ஏ. படித்த மூன்று மாணவர் களுக்கு, ஆண்டு சம்பளம் தலா ரூ.70 லட்சத்தில் (மாதச் சம்பளம் ரூ.5.83 லட்சம்) வேலை கிடைத்துள்ளது. இப்பயிலகத்தின் வளாகத் தேர்வு வரலாற்றில் இதுவே மிகவும் அதிக சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பயிலகத்தில் ஆண்டுதோறும் வளாகத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2007-ஆம் ஆண்டில் சி.ஏ. படித்த மாணவருக்கு ஆண்டு சம்பளம் ரூ.38.25 லட்சத்தில் வேலை கிடைத்தது. அப்போது இதுதான் ஒரு சாதனையாக கருதப்பட்டது. தற்போது வழங்கப்பட்டுள்ள சம்பளம் இதையும் விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

சென்னை

இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிலகத்தின் சென்னை வளாகத்தில் நடைபெற்ற ஆள் சேர்ப்பு தேர்வில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஓலம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம், மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆண்டு சராசரி சம்பளம் ரூ.70 லட்சமாகும். அதாவது ஒரு மாணவருக்கு, மாதத்திற்கு ரூ.5.83 லட்சம் சம்பளம் கிடைக்கும்.

சென்னை, மும்பை உள்ளிட்ட ஐந்து பெரிய நகரங்களில் உள்ள இந்த பயிலகத்தின் மையங்களில் வளாகத் தேர்வு மார்ச் 4-ந் தேதி தொடங்கியது. இந்த வளாகத் தேர்வுகளில், இந்தியன் ஆயில், ஐ.டி.சி., தொலாராம், வேதாந்தா, எல் - டி, ஆக்சிஸ் பேங்க், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் களம் இறங்கின.

சி.ஏ. மாணவர்களை தேர்ந்தெடுப்பதில் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்திய நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. தனியார் துறையைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

மும்பை

முதல் நாள் நடைபெற்ற தேர்வில் மட்டும் 320 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. இதில், மும்பை பயிலகத்தில்தான் அதிக மாணவர்கள் (148 பேர்) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக புதுடெல்லி (65), இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா (42) மூன்றாவது இடத்திலும் உள்ளன. சென்னையில் 22 மாணவர்களும், பெங்களூரில் 44 மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சி.ஏ. படித்த மாணவர் களுக்கு, இவ்வாண்டு வளாகத் தேர்வில், ஆண்டு சம்பளம் சராசரியாக ரூ.6.25 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை உள்ளது.