இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

உலக அளவில் 3-வது இடத்தில் இந்திய மருந்து துறை

28 பிப்ரவரி, 2010

இந்திய மருந்து துறை, உற்பத்தி அளவு அடிப்படையில், சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ரூ.1 லட்சம் கோடி

இந்தியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான அளவில் உள்ளது. மதிப்பின் அடிப்படையில் நம் நாட்டின் மருந்து உற்பத்தி துறை, உலகில் 14-வது இடத்தில் உள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1980-ஆம் ஆண்டில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்தத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,500 கோடியாக இருந்தது. இது, தற்போது ரூ.1,00,611 கோடியாக அபார வளர்ச்சி கண்டுள்ளது.

மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்து வருவதே, இந்திய மருந்து துறையின் சந்தை மதிப்பு இந்த அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணமாகும். கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

முக்கிய நாடுகள்

நம் நாட்டிலிருந்து மருந்துகள், இடைநிலைப் பொருள்கள், மருந்து மூலப்பொருள்கள், உயிரி மருந்துகள் மற்றும் சில சேவைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலிருந்து பிரதானமாக அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.