இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

பெப்ரவரி 26-27 மற்றும் 28-ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மினி இன்போரெல் கண்காட்சி

17 பிப்ரவரி, 2010



தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடனான மீள் எழுச்சி எனும் தொனிப்பொருளுடன் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கண்காட்சியான மினி ‘இன்போரெல்’ கண்காட்சி எதிர்வரும் 26,27 மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சிக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இலங்கை தகவல் தொழில்நுட்பத்துறை சம் மேளனத்தினால் கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டில் வெளியிடப் பட்டது.ணூளீவீபு மற்றும் கல்வி அமை ச்சின் ஆதரவுடன் நடத்தப்படும் இக் கண்காட்சியில் வட பகுதி இளை ஞர் ,யுவதிகள் தகவல்தொ ழில் நுட்பத் துறையில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்குரிய வழி காட்டுதல்களும் வழங்கப்படும்.
இதேவேளை இக் கண்காட்சி குறித்து இன்போரெல்லின் தலை வரும் ,கொழும்புப் பல்கலைக் கழ கத்தின் கணனிப் பிரிவின் பணிப்பாளருமான டாக்டர் ருவான் வீரசிங்க தெரிவிக்கையில்,
இன்போரெல் கண்காட்சியானது வடபகுதி இளைஞர்களை சமூகத்தின் பிரதான கட்டமைப்பிற்குள் உள்ளீர்க்க உதவுவதுடன் அடிப்படை தகவல் தொடர் பாடல் தொழில்நுட்ப அறிவை இளைஞர்,யுவதிகளுக்கு புகட்டுவதன் மூலம் நவீன உலகில் எதிர்கொள்ளும் சவால் களுக்கு அவர்கள் முகம் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இன்போரெல் கண் காட்சியில் உள்நாட்டு ,வெளிநாட்டு முன்னணி தகவல்தொழில்நுட் பத்துறை நிறுவனங்கள் உட்பட 50இற்கும் மேற்பட்ட நிறுவனங் கள் கலந்து கொள்கின்றன.இக் கண் காட்சி குறித்த மேலதிக விபரங்களை இன்போரெல் செயலகம்,சேர் மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தை கொழும்பு-07 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.