இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

விமான எரிபொருள் விலை 2.5% குறைப்பு

16 பிப்ரவரி, 2010

விமான எரிபொருள் விலை 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், விமான எரிபொருள் விலையை 2.5 சதவீதம், அதாவது ஒரு கிலோ லிட்டருக்கு (1,000 லிட்டர்) ரூ.974 குறைத்து ரூ.37,982-ஆக (டெல்லியில்) குறைத்துள்ளது. நடப்பு பிப்ரவரி மாதத்தில், இரண்டாவது முறையாக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானச் சேவை நிறுவனங்களின் மொத்த செயல்பாட்டு செலவினத்தில் எரிபொருள்களுக்கான செலவினம் 40 சதவீத அளவிற்கு உள்ளது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலையின் நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியும், 16-ந் தேதியும் விமான எரிபொருளின் விற்பனை விலை குறித்து முடிவு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஜனவரி மாதத்தில், சர்வதேச சந்தையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 76.66 டாலராக இருந்தது. இது, தற்பொழுது சராசரியாக 72.09 டாலராக குறைந்துள்ளது. இதனையடுத்தே, விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.