இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

2010 ஜனவரியில் பணவீக்கம்

16 பிப்ரவரி, 2010

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் கணிக்கப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணால்
அளவிடப்படும் ஆண்டுச் சராசரிப் பணவீக்கம் 2008 நவெம்பரிலிருந்து தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக
2009 டிசெம்பரில் 3.4 சதவீதத்திலிருந்து 2010 ஜனவரியில் 3.1 சதவீதத்திற்கு மேலும் மெதுவடைந்தது.
எனினும், புள்ளிக்குப் புள்ளி அடிப்படையில் பணவீக்கம் எதிர்பார்த்தவாறு 6.5 சதவீதத்திற்கு அதிகரித்து
பெரும்பாலும் 2009இன் தொடர்பான மாதத்திலான தாழ்ந்த தளத்தைப் பிரதிபலிக்கிறது. இதே மாதிரியான
போக்கு மையப் பணவீக்க அளவீட்டிலும் அவதானிக்கப்பட்டது.
2
இதேவேளை, மாதாந்தச் சுட்டெண்ணால் எடுத்துக்காட்டப்பட்டவாறு பொது விலைமட்டம் முன்னைய
மாதத்துடன் ஒப்பிடுகையில் 2010 ஜனவரியில் 1.4 சதவீதம் கொண்ட அதிகரிப்பைப் பதிவு செய்ததுடன்
சுட்டெண் உண்மையான நியதிகளில் 213.5 இலிருந்து 216.4 இற்கு அதிகரித்தது. சுட்டெண்ணிலான மாதாந்த
அதிகரிப்புக்கான பங்களிப்பு அரிசி, தேயிலை, சில வகை மீன்கள் மற்றும் சீனியில் ஏற்பட்ட விலை
அதிகரிப்புக்கள் காரணமாக 1.5 சதவீதத்தால் அதிகரித்த உணவு மற்றும் வெறியமல்லா குடிவகைகள்
வகையிலிருந்து பெறப்பட்டது. எனினும், தேசிக்காய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு
மற்றும் கோதுமை மா என்பவற்றில் விலை வீழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், கல்வி (7.4 சதவீதம்);
நலம் (6.5 சதவீதம்); தளபாடம், வீட்டுப்பாவனைக் கருவி மற்றும் கிரமமான வீட்டுப் பேணல் (1.9 சதவீதம்);
பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் (1.5 சதவீதம்); உடை மற்றும் பாதணி (1.0 சதவீதம்) ஆகிய
துணை வகைகளிலான அதிகரிப்புகளும் சுட்டெண்ணிலான அதிகரிப்பிற்குப் பங்களிப்புச் செய்தன. எனினும்,
போக்குவரத்துத் துணை வகை (-0.9 சதவீதம்) பெற்றோல் விலைக் குறைப்பு காரணமாக வீழ்ச்சியைப் பதிவு
செய்தது.