ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் இரண்டும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2009 டிசெம்பரில்
சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்தன. பன்னாட்டுப் பொருட்கள் சந்தைகளில் தேயிலை மற்றும்
இறப்பரால் உருவாக்கப்பட்ட உயர் விலைகள் காரணமாக 40.2 சதவீதத்தால் வளர்ச்சியடைந்த
வேளாண்மை ஏற்றுமதிகளால் தூண்டப்பட்டு ஏற்றுமதி வருவாய்கள் 2009 டிசெம்பரில் ஐ.அ.டொலர் 723
மில்லியனுக்கு 6.4 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தன. இறக்குமதிகள் மீதான செலவினம் 2009 டிசெம்பரில்
ஐ.அ.டொலர் 1,054 மில்லியனுக்கு 0.5 சதவீதத்தால் சிறிதளவில் வளர்ச்சியடைந்தது. இவ் வளர்ச்சிக்கு
முக்கிய காரணிகளாக இடைநிலைப் பொருட்கள் மற்றும் நுகர்வுப் பொருட்களின் இறக்குமதிகள்
விளங்கின.
எவ்வாறாயினும், ஆண்டுக்கு ஆண்டு திரண்ட ரீதியில,; ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் மற்றும்
இறக்குமதிகள் மீதான செலவு 2009இல் முறையே 12.7 சதவீதத்தாலும் 29.4 சதவீதத்தாலும்
வீழ்ச்சியடைந்தன. வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ச்சியான 12ஆவது மாதமாக 2009 திசெம்பரில் 10.4
சதவீதத்தால் ஐ.அ.டொலர் 330 மில்லியனுக்குச் சுருங்கியது. இதன்படி, திரண்ட வர்த்தகப் பற்றாக்குறை
2008இன் ஐ.அ.டொலர் 5,897.4 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2009இல் ஐ.அ.டொலர் 2,798.6
மில்லியனுக்கு 52.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது.
2
மூலங்கள்: இலங்கை மத்திய வங்கி
இலங்கை சுங்கத் திணைக்களம ;
2009 யூனிலிருந்து கணிசமானளவில் அதிகரித்த இலங்கைத் தேயிலையின் விலைகள் 2009 திசெம்பரில ;
கிலோக்கிறாம் ஒன்றுக்கு ஐ.அ.டொலர் 4.27 ஐ அடைந்து 32 சதவீத அதிகரிப்பைப் பிரதிபலித்தது.
இறப்பரின் சராசாசி விலை ஆண்டுக்கு ஆண்டு கிலோக்கிறாம் ஒன்றுக்கு 2.53 டொலர் கொண்ட உயர்
விலையை 2009 திசெம்பரில் அடைந்தது. இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து ஐ.அ.டொலர் 240 மில்லியனை
உருவாக்கிய மிளகு, எள்ளு, ஏனைய எண்ணெய் விதைகள் மற்றும் கொக்கோ போனற்
சிறுவேளாண்மைப் பொருட்கள் நாட்டுக்கான ஏற்றுமதி வருவாய்களின் முக்கிய மூலமாக அதிகரித்து
வந்துள்ளது. 2009 திசெம்பரில் இரத்தினக் கற்களின் ஏற்றுமதிகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
காணப்பட்டது. பெற்றோலிய உற்பத்திகள், இறப்பரை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகள், பொறி
மற்றும் கருவியின் குறைந்த ஏற்றுமதிகள் காரணமாக கைத்தொழில் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன. மீன்,
நண்டுகள் மற்றும் இப்பிகள் ஏற்றுமதிகளின் 25.4 சதவீத அதிகரிப்புக்கு மத்தியிலும் உணவு, பானம்
மற்றும் புகையிலை உற்பத்திகளின் ஆண்டுக்கு ஆண்டு ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன.
2009 திசெம்பரில் மசகெண்ணெயின் சராசரி இறக்குமதி விலை 2009 திசெம்பரில் பீப்பா ஒன்றுக்கு
ஐ.அ.டொலர் 78 ஐ அடைந்தமையால் பெற்றோலிய இறக்குமதிகள் மீது ஏற்பட்ட உயர் செலவினம்
காரணமாக இடைநிலைப் பொருட்கள் மீதான செலவினம் 2009 திசெம்பரில் அதிகரித்தது. எனினும்,
முன்னைய ஆண்டின் திசெம்பரிலிருந்து இறக்குமதி விலைகளிலான குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காரணமாக
உயர் இறக்குமதி அளவுக்கு மத்தியிலும் வளமாக்கி இறக்குமதிகள் மீதான செலவினம் வீழ்ச்சியடைந்தது.
நுகர்வுப் பொருட்களிடையே, அரிசி மற்றும் கோதுமைத் தானியத்தின் இறக்குமதிகள் பெருமளவில்
அதிகரித்திருக்கையில் சீனியின் இறக்குமதிகள் உயர் விலைகளுக்கும் மத்தியிலும் வீழ்ச்சியடைந்தன.
உந்து ஊர்திகள் மற்றும் மின்கருவிகளின் குறைந்த இறக்குமதிகள் காரணமாக உணவல்லா நுகர்வுப்
பொருட்களின் இறக்குமதிகள் சுருக்கமடைந்தன. முதலீட்டுப் பொருட்களின் அனைத்து வகைகளது
இறக்குமதிகளும் 2009 திசெம்பரில் வீழ்ச்சியடைந்தன.
வர்த்தகக் கணக்கிலான பற்றாக்குறை தொழிலாளர் பணவனுப்பல்களின் உயர் உட்பாய்ச்சல்களால்
எதிரீடு செய்யப்பட்டது. 2009இல் தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 3,330.3 மில்லியனுக்கு 14.1
சதவீதத்தால் அதிகரித்தன. இதன் விளைவாக, தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 532
மில்லியனாக விளங்கி (கிட்டத்தட்ட 19 சதவீதம்) வர்த்தகப் பற்றாக்குறையை விஞ்சிக் காணப்பட்டது.
3
;
ஆசியத் தீர்ப்பனவு ஒன்றிய நிதியங்களுடனும், நிதியங்களின்றியும் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2009
திசெம்பர் இறுதியில் முறையே ஐ.அ.டொலர் 5,357 மில்லியனாகவும், ஐ.அ.டொலர் 5,097 மில்லியனாகவும்
விளங்கின. இது ஐ.அ.டொலர் 277 மில்லியன் கொண்ட அரச திறைசேரி உண்டியல்கள் மற்றும்
ஐ.அ.டொலர் 1,068 மில்லியன் கொண்ட அரச திறைசேரி முறிகளுக்கான குறுகிய தவணை தேறிய
உட்பாய்ச்சல்களை உள்ளடக்குகின்றது. முன்னைய 12 மாத சராசரி இறக்குமதிகளின் அடிப்படையில்
(மாதமொன்றுக்கு ஐ.அ.டொலர் 823 மில்லியன்), ஆசியத் தீர்ப்பனவு ஒன்றிய நிதிகளின்றி மொத்த
அலுவல்சார் ஒதுக்குகள் 6.2 மாத இறக்குமதிகளை நிதியிடப் போதுமானதாகும்.
மார்ட்டின் லூதர் கிங் படுகொலை ஆவணங்கள் வெளியீடு
-
மார்டின் லூதர் கிங் படுகொலை குறித்த ஆவணங்களை டிரம்ப் நிர்வாகம்
வெளியிட்டுள்ள நிலையில், இது பற்றி தங்கள் தந்தையின் நற்பெயரை கெடுக்கும்
முயற்சியில் ஈடுபட வேண...
5 மணிநேரம் முன்பு