முன்னதாக 7.75 சதவீத வளர்ச்சி இருக்கும் என இடைக்கால பொருளாதார மறுஆய்வில் நிதியமைச்சகமும், 7.5 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என தனது காலாண்டு நிதிக் கொள்கை மறு ஆய்வில் ரிசர்வ் வங்கியும் மதிப்பிட்டிருந்தன. தற்போது மத்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் மதிப்பு இவற்றைவிடக் குறைவானதாக இருக்கிறது.
எனினும், நிதியாண்டின் பிற்பாதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தைத் தாண்டி வேகமாக வளர்ச்சியடைகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்தப் புள்ளிவிரங்களின்படி, வேளாண்மை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் 0.2 சதவீதம் அளவுக்கு குறையும் எனத் தெரியவந்துள்ளது. இந்த மதிப்பு முந்தைய நிதியாண்டில் 1.6 சதவீதமாக இருந்தது.