புதுடெல்லி: பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ரூ.2.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏறுமுகமாக இருந்த போதிலும் ஜனவரி மாத இறுதியில் சரியத் தொடங்கின. சர்வதேச பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவையே இதற்குக் காரணம். இந்த ஆண்டின் முதல் வர்த்தக தினமான ஜனவரி 4ம் தேதியிலிருந்து பிப்ரவரி 6ம் தேதி வரையில் சென்செக்ஸ் 1,549 புள்ளிகளை இழந்துள்ளது. இது 9 சதவீத இழப்பாகும்.
இதன் காரணமாக, 2009 டிசம்பர் 31ம் தேதியன்று ரூ.26,49,481 லட்சம் கோடியாக இருந்த சென்செக்ஸ் குறியீட்டெண்களைக் குறிக்கும் 30 நிறுவனங்களின் சொத்து மதிப்பு, 6ம் தேதியன்று ரூ.24,21,441 லட்சம் கோடியாகக் குறைந்தது.
இதுபோல கடந்த டிசம்பர் 31ம் தேதி ரூ.60.81 லட்சம் கோடியாக இருந்த பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு பிப்ரவரி 6ம் தேதி ரூ.58.1 லட்சம் கோடியாகக் குறைந்தது.
இதன்மூலம் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை முதலீட்டாளர்களுக்கு ரூ.2.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
Posts Relacionados: