இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

புலம்பெயர் சமூகத்தை வடக்கில் முதலிடுமாறு வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள்

8 பிப்ரவரி, 2010


நாட்டில் தற்போது அமைதி நிலவுவதால் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் வடக்கில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமைச்சர், வெளிவிவகார அமைச்சின் காரியாலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவது குறித்து நேரில் ஆராய்ந்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
முழு வடபகுதியும் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ளும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் கவுன்சில் அலுவலகத்தை அமைக்க முடிபெடுத்தோம்.
இது புலம்பெயர் சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்த வழிவகுப்பதுடன் ,மக்களுக்கு சிரமங்களைக் குறைக்கும் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,அரசாங்கம் சுற்றுலா ,மீன்படி, விவசாயம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்ய அடையாளம் கண்டுள்ளது.இதன் மூலம் யாழ்ப்பாண மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
யாழ்ப்பாணம் எதிர்காலத்தில் வெளியுலகத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மையமாக உருவாகும்.
வட பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.இதன் மூலம் புலம்பெயர் தமிழ் சமுதாயம் மட்டுமல்ல வேறு நாடுகளில் இருந்தும் முதலீட்டை வரவழைக்க முடியும்.இந்த நடவடிக்கை தேசிய பொருளாதா ரத்திற்கு வலுச்சேர்க்கும். கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தால் யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதி மாவட்டங்கள்  அபிவிருத்தி செய்யப்படவில்லை.
தற்போது உருவாகியுள்ள சூழலால் அபிவிருத்திக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டும். இதன் மூலம் அவர்களும் அபிவிருத்தியில் பங்குதாரர்களாக முடியும் எனவும் வெளிவிகார அமைச்சர் றோகித போகொல்லாகம யாழ்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது தெரிவித்தார்.