புதிய துணை ஆளுநரின் நியமனம் நாணயச் சபை, மாண்புமிகு நிதியமைச்சரின் இணக்கத்துடன் துணை ஆளுநர் திரு. பி.டி.ஜே. பர்னாந்துவை 2010 சனவரி 05ஆம் நாளிலிருந்து துணை ஆளுநராக பதவி உயர்த்தியிருக்கிறது. இப் பதவி உயர்வானது வங்கியின் ஒருவர் பின் மற்றவர் என்ற திட்டத்திற்கு இசையவும் மத்திய வங்கியின் புதிய சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
திரு. பி.டி.ஜே. பர்னாந்து மனித வள முகாமைத்துவம், முகாமைத்தவ கணக்காய்வு, புள்ளிவிபரவியல், தகவல் தொழில்நுட்பம், நாணயத் தொழிற்பாடு, நிதி, பணிமனை, பாதுகாப்புப் பணிகள் உட்பட பரந்த துறைகளில் 33 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தினைக் கொண்டவர். அத்துடன் அவர் நாணயச் சபைக்கான செயலாளராகவும் தொழிற்பட்டு வருகின்றார். இந் நியமனத்திற்கு முன்னர் அவர் ஏறத்தாழ 5 ஆண்டுகள் உதவி ஆளுநர் பதவியை வகித்திருக்கின்றார்.
திரு. பர்னாந்து டீ.ளு பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்தும் ஆ.ளுஉ பட்டத்தினை பேர்மிங்கம் பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றுக் கொண்டார். புகழ் பெற்ற பன்னாட்டு மற்றும் உள்நாட்டு சஞ்சிகைகளில் வெளிவந்த பல கட்டுரைகளின் ஆசிரியராக விளங்கிய இவர் உள்நாட்டு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் வள ஆளணியினராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
இவை தவிர, இவர் 2002 இலிருந்து லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட்டின் பணிப்பாளராகவும் லங்கா புத்திர அபிவிருத்தி வங்கியினது சபையின் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். அவர் இலங்கை வங்கியாளர் நிறுவகத்தின் துணைத் தலைவராகவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் தலைவராகவும் பணியாற்றுகின்றார். இலங்கைப் பிரசைகளின் ஆளடையாளத்தினை இலத்திரனியல் ரீதியாக பதிவு செய்து சேமித்து வைப்பதற்காகவும் பாதுகாப்பு நிருவாக நோக்கங்களுக்காக தனிச் சிறப்பு முறையில், அடையாளம் காணப்பட்ட ஆட்களுக்கு அடையாள அட்டையினை வழங்குவதற்குமான முறைமையொன்றினை வழங்கல், நிறுவுதல், தொடக்கி வைத்தல் மற்றும் பராமரித்தல்
என்பனவற்றிற்காக பன்னாட்டு விலைக்கோரல் முறைமையினூடாக பணி வழங்குநரரொருவரை தெரிவு செய்வதற்கான அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார். திரு. பர்னாந்து இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்திற்கான பெற்றோலிய உற்பத்திகளின் கொள்வனவுக் குழுவிற்கும் பெற்றோலிய உற்பத்திகளினது கொள்வனவுக்கான பேச்சுவார்த்தைக் குழுவிலும் உறுப்பினராக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பலூன் பீரங்கி முதல் மர டாங்கிகள் வரை; ரஷ்யா-யுக்ரேன் போரில் பொம்மை
ஆயுதங்களின் பங்களிப்பு
-
யுக்ரேனிய படைகள் ரேடார்கள், கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள்,
டாங்கிகள், பீரங்கிகள் போன்ற ஆயுதங்களை போலி மாதிரியாக வடிவமைத்து எதிரிகளை
திசை திருப்புவதற...
2 மணிநேரம் முன்பு